திருக்குறுங்குடி கோயிலில் ஜூன் 8ம் தேதி எண்ணெய் காப்பு உத்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மே 2012 10:05
திருநெல்வேலி : திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலில் வரும் ஜூன் 8ம் தேதி ஒருகோட்டை எண்ணெய் காப்பு உத்ஸவம் நடக்கிறது. நான்குநேரி தாலுகாவில் உள்ள திருக்குறுங்குடி கிராமம் 108 வைணவ ஸ்தலங்களில் மிக முக்கியமான திருத்தலம். இது 4 ஆழ்வார்களால் பாடப்பெற்ற தலம். இங்குள்ள அழகிய நம்பிராயர் கோயிலின் உப சன்னதியான திருமலைநம்பி கோயிலில் வரும் ஜூன் 8ம் தேதி ஒருகோட்டை எண்ணெய் காப்பு உத்ஸவம் நடைபெற உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஒருகோட்டை தைலக்காப்பு அபிஷேகம் திருக்குறுங்குடி திருஜீயர்மடம் ஜீயர் சுவாமிகளால் நடத்தப்பட இருக்கிறது. உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும், மழை வேண்டியும் இந்த உத்ஸவம் நடக்கிறது. எனவே ஆஸ்திக பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பெருமாளின் அருள்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஜீயர் சுவாமிகளின் உத்தரவுப்படி மடம் பவர் ஏஜன்ட் ஸ்ரீநிவாச அய்யங்கார் அறிவுரைப்படி திருமடம் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.