கோவை : திருப்பூர், கோவையில் ஓணம் பண்டிகையை வரவேற்கும் விதத்தில் பாரம்பரிய உடை அணிந்து வீட்டில் அத்தப்பூக்கோலம் வரைந்து கேரளா மக்கள் கொண்டாடினர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் அய்யப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் அத்திப்பூ கோலமிட்டு பக்தர்கள் ஓணம் பண்டிகை கொண்டாடினர்.