Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நதிகளை தெய்வமாக வழிபடுவது ஏன்? உச்சி மலையில் ஓர் உருகவைக்கும் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தவழ்ந்து சென்று ஒரு தரிசனம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2020
04:08


ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் சிவகோரியில் உள்ளது ஒரு அற்புதத் திருக்கோயில். மிகப்பெரிய மலையினைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த குகைக் கோயிலை, பலநூறு ஆண்டுகளுக்கு முன், ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் கண்டுபிடித்துச் சொன்னானாம். மலை ஜாதியினரே இப்பகுதியில் அதிகம் வசிக்கின்றனர். அமர்நாத் சிவாலயத்திற்கு அடுத்த பெருமை உடையதாகச் சொல்லப்படுகிறது இவ்வாலயம். சிவகோரி குகைக் கோயிலுக்குச் செல்ல சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் குகைப்பாதையில் செல்ல வேண்டும். அதுவும் ஏதோ நேராகச் சென்று தரிசித்துவிட முடியாது. ஒரு ஆள் மட்டுமே நுழையக்கூடிய இடுக்கு வழியில் சென்றால், அடுத்து வரும் குகைப்பாதையில் கீழே படுத்தபடி தவழ்ந்து தவழ்ந்து செல்ல வேண்டும். இப்படிச் சென்றால் வழியில் ஒரு நீரூற்று காணப்படும். அந்த நீரூற்றின் கீழ் நான்கு அடி உயரமுள்ள சுயம்பு லிங்கம் காட்சிதருகிறது. அருகே சென்றால், பக்தர்களிடமுள்ள மலர்கள், மாலைகள், இதர பொருட்களை சாது ஒருவர் வாங்கி ஈசனுக்கு சாத்துகிறார். பின்னர் ஒரு செம்பில் நிரூற்று நீரை எடுத்து, பக்தர்களிடம் தருகிறார். அதனை வாங்கி பக்தர்கள் தங்கள் மனமும் சிவபிரானின் லிங்கத்திருமேனியும் குளிர அபிஷேகம் செய்கிறார்கள். அந்த சமயத்தில் அங்கே ஒலிக்கும் உடுக்கை ஒலி எதிரொலித்தது பக்தி அதிர்வினை நம்முள் நிறைக்கிறது. அய்யனை தரிசித்த பின் அம்மை பார்வதியையும், இதர தெய்வங்களையும் தரிசித்து திரும்பலாம். வெளிச்சம் குறைவான குகைக்குள் காட்சிதந்தாலும் இந்த ஈஸ்வரனை தரிசிப்பது நமக்கு மட்டுமன்றி ஏழேழு தலைமுறைக்கும் பிரகாசமான வாழ்வளிக்கும் என நம்புகிறார்கள் பக்தர்கள். மகா சிவராத்திரி சமயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கே வருவதே அதற்கு சாட்சி.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar