உன்னை காணாத கண்ணும்.. கோயில் திறப்பால் பக்தர்கள் நெகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2020 11:09
கொரோனா ஊரடங்கால் ஐந்து மாதங்களாக பூட்டப்பட்டிருந்த ஹிந்து கோயில்களை திறக்கவும், பக்தர்கள் தரிசனம் செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதையறிந்த பக்தர்கள் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தனர். கோயில் நடை திறந்ததும் முதல் நபராக சென்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என வேண்டிக் கொண்டனர். தொற்று பரவாமல் தடுக்க மார்ச் 25 முதல் கோயில்கள் மூடப்பட்டன. ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்திற்குள் இருக்கும் சிறிய கோயில்கள் ஜூனில் திறக்கப் பட்டது. பெரிய கோயில்களை திறக்க தடை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க அரசு உத்தரவிட்டது. எனினும் சமூக இடைவெளி, முகக்கவசம் கட்டாயம் அணியவும், அதை கண்காணிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் நீண்ட நாட்கள் அடைக்கப்பட்டிருந்த உடுமலை மாரியம்மன் கோவில் அரசு உத்தரவு படி திறக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவி., ஆண்டாள் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயில், அருப்புக்கோட்டை சிவன் கோயில், சாத்துார் பெருமாள் கோயில் உட்பட 546 சிறிய, பெரிய கோயில்கள் இன்று (செப்.,1) பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதிகாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை நடை திறந்திருக்கும். பரிகார பூஜைகள்ராகு மிதுன ராசியில் இருந்து ரிசபம் ராசிக்கும், கேது தனது ராசியில் இருந்து விருட்சக ராசிக்கும் இன்று இடம் பெயர்வதால் விருதுநகர் சிவன் கோயிலில் பரிகார பூஜைகள் இன்று அதிகாலையில் இருந்து நடைபெற்று வருகிறது. அதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.