குமுளி; கேரளாவில் அனைத்து மதத்தினரும் ஒருங்கிணைந்து குதுாகலமாக கொண்டும் விழா ஓணம் பண்டிகையாகும்.
ஒரு வாரம் நடக்கும் இவ்விழாவில் பல வகையான காய்கறிகளை சமையல் செய்து விருந்து படைப்பர். மெகாசைஸ் அத்தப்பூக்கோலம் போட்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கும். குடும்பம் குடும்பமாக பல்வேறு சுற்றுலாதலங்களுக்கு செல்வர்.இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக இவை அனைத்திற்கும் தடை ஏற்பட்டது. ஓணம் நிறைவு நாளான நேற்று வீடுகளிலேயே சிறிய அளவிலான அத்தப்பூக்கோலம் போட்டு வணங்கினர். காய்கறி சமையல் செய்து வீட்டிற்குள் எளிமையாக கொண்டாடினர்.