மணம்பூண்டி ரகூத்தமர் மூல பிருந்தாவனம் பக்தர்களின் வழிபாட்டிற்கு திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2020 03:09
விழுப்புரம்: திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டி ரகூத்தம பிருந்தாவனம் பக்தர்களின் வழிபாட்டுக்கு நேற்று முறைப்படி திறக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிர்ந்தது. 160 நாட்களுக்கு பிறகு வழிபாட்டுத் தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து நேற்று காலை 6:00 மணிக்கு மணம்பூண்டி, ரகூத்தமர் மூலபிருந்தாவன கோவில் முகப்பு வாயில் கோ பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, கோவிலின் மேலாளர் அனந்ததீர்த்தாச்சாரிய சிம்மலகி சுவாமிகள் முகப்பு வாயிலை திறந்து வைத்தார். கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் இத்தளத்திற்கு அதிக அளவில் வருவார்கள். இந்நிலையில் 160 நாள் இடைவெளிக்கு பிறகு பிருந்தாவனம் பக்தர்களின் அனுமதிக்காக திறக்கப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் உள்ள ரகூத்தமர்சுவாமி பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.