கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டையில், உலக நன்மைக்காக சிறப்பு பூஜை நடந்தது. கொரோனா பரவலை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், மக்கள் நோயின்றி வாழ வேண்டியும், உலக நன்மை வேண்டியும், சிவனடியார்கள் சார்பில் கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து மகேஸ்வர பூஜை செய்யப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகள் லாலாப்பேட்டையை சேர்ந்த சிவ பக்தர் குணசேகரன் செய்திருந்தார்.