காரமடை அரங்கநாதர் கோயிலில் பகல் பத்து 6 ம் நாள் உற்சவம்; சிறப்பு அலங்காரத்தில் சுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2025 12:12
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் பகல் பத்து உற்சவத்தின் 6 ம் நாளில் ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோயில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பகல் பத்து உற்சவமும், அதைத் தொடர்ந்து ராபத்து உற்சவம் நடைபெறும். 20ம் தேதி காலை 9:15 மணிக்கு திருமொழி திருநாள் என்னும் பகல் பத்து உற்சவம் துவங்கியது. இன்று உற்சவத்தின் 6 ம் நாளில் ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வரும் 30ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு வைகுண்ட ஏகாதசி என்னும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற உள்ளது. அன்று இரவு திருவாய்மொழித் திருநாள் ராப்பத்து உற்சவம் துவங்க உள்ளது. ஜனவரி 6ம் தேதி குதிரை வாகனத்தில் திருமங்கை மன்னன் வேடுபரியும், எட்டாம் தேதி திருவாய் மொழித் திருநாள் சாற்று முறை உற்சவம் பூர்த்தியும் நடைபெற உள்ளது.