சமுதாயத்தில் இரண்டு மனிதர்களுக்கிடையே பகைமை ஏற்பட்டு அதில் ஒருவருக்கு துன்பம் நேர்ந்தால், இன்னொருவர் மகிழ்ச்சி அடைகிறார். இது தவறான அணுகுமுறை. இறைவன் மீது நம்பிக்கை கொண்டவன் அனைவரையும் தன்னுடைய சகோதரர்களாக கருத வேண்டும். மற்றவர் படும் துன்பத்தைக் கண்டு மகிழ்வதோ, இன்பத்தைக் கண்டு பொறாமைப்படுவதோ தர்மம் ஆகாது.