புதுமனை புகுவிழாவை சூரியோதயத்திற்கு முன்பு தான் நடத்த வேண்டுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2020 05:09
சூரிய உதயத்திற்கு முந்திய நேரத்தை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்வர். அதிகாலை 4.30- 6.00 மணி வரையுள்ள நேரமான இதை கோதுõளி லக்னம் என்பர். பசுக்கள் மேய்ச்சலுக்கு கிளம்பும் போது அவற்றின் குளம்படி துõசு எழும் சமயம் என்பது இதன் பொருள். இந்தசமயத்தில் செய்யும் வழிபாட்டுக்கு சிறந்த பலன் உண்டாகும் என்கிறது சாஸ்திரம். புதுமனை புகுவிழாவில் நடத்தப்படும் கணபதி ஹோமம், கோபூஜை, பால் காய்ச்சுதல் போன்றவற்றை பிரம்ம முகூர்த்தத்தில் செய்வது சிறப்பானதாககருதப்படுகிறது.