சிவபக்தனான ராவணனைத் தெய்வமாக வணங்கும் கிராமம் நம் நாட்டில் இருக்கிறது. உத்தரப்பிரதேசம் ராமாபாய் நகர் மாவட்டத்திலுள்ள புக்ராயன் கிராமத்தில் ராவணனை வணங்குகிறார்கள்.இங்குள்ள சின்மஸ்திகா அம்மன்கோயிலில் ராவணன் சந்நிதி இருக்கிறது.தசனன் கோயில் என இதை அழைக்கின்றனர். தசனன் என்பதற்கு பத்துத் தலைகள் கொண்டவன் என்பது பொருள். நவராத்திரி விழாவின் போது ராவண மேளா விழா இங்கு நடக்கும். ஆண்டுக்கு ஒருமுறை விஜயதசமியன்று அதிகாலையில் திறக்கப்படும். ராவண ரதம் பவனி வரும்போது பக்தர்கள் பூக்கள் துõவி, கதே கிளேஷ், ஜெய் லங்கேஷ் என கோஷமிடுவர். துயர்போக்கும் இலங்கை அரசர் வாழ்க என்பது இதன் பொருள்.