கலாவல்லியாகிய சரஸ்வதியின் அருள்பெற்றவர்களில் குமரகுருபரர் குறிப்பிடத்தக்கவர். இவருக்கு காசியில் மடம் ஒன்று கட்டும் எண்ணம் எழுந்தது. அதற்கான அனுமதியைப் பெற அங்கிருந்த சுல்தானை நேரில் சந்திக்க வேண்டிய கட்டாயம் உண்டானது. அவரிடம் இந்தியில் பேசினால் மட்டுமே விருப்பத்தைக் கூற முடியும் என்ற நிலையில், கங்கைக்கரையில் சரஸ்வதியை தியானித்து சகலகலாவல்லி மாலை என்னும் பத்து பாடல்களைப் பாடினார். அவரின் பக்திக்கு இரங்கிய சரஸ்வதி இந்தியில் பேசும் திறம் அருளினாள். இதன் பின் மன்னரைச் சந்தித்த குமரகுருபரர் திருப்பனந்தாள் காசி மடத்தைக் கட்டும் உரிமையும்,அதற்கான இடமும் பெற்றார்.