அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே மாலைப்பட்டியில் செல்வ சக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாகசாலை துவங்கியது. நேற்று காலை இரண்டாம் கால பூஜைகள் நடந்தன. அதையடுத்து சிவாச்சார்யார் பிரகாஷ் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிேஷகம் நடத்தினார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.