* பசித்தவருக்கு உணவு அளிப்பவனை சொர்க்கம் தேடி வரும். * பேசுவது வெள்ளி என்றால் மவுனம் காப்பது தங்கமாகும். * ஏழைக்கு தானம் செய்வதை விட அதிகமான நன்மை மனைவிக்கு செலவு செய்வதில் உண்டு. * கடன் கொடுக்கல் வாங்கலில் மென்மையாக நடந்து கொள்ளுங்கள். * பணவசதி இருந்தும் திருமணம் செய்யாமல் இருப்பது நல்லதல்ல. * இரக்கமற்ற கஞ்சன் சொர்க்கம் நுழைய மாட்டான். * உண்மையை மறைத்து பொய் கூறுபவர்களை இறைவன் நேசிப்பதில்லை. * பேராசையால் பணத்திற்காக மட்டும் திருமணம் செய்யாதீர்கள். * பெரியோர்களை மதிக்காதவர்கள் எம்மைச் சேர்ந்தவர் அல்ல. * வரவுக்குத் தக்கபடி செலவு செய்பவன் ஏழ்மை அடைய மாட்டான். * ஆடம்பர வாழ்வில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள். நபிகள் நாயகம்