மகாளய அமாவாசை சிவகங்கை தெப்பக்குளத்தில் முன்னோர்களுக்கு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2020 04:09
சிவகங்கை : மகாளய அமாவாசையை முன்னிட்டு சிவகங்கை தெப்பக்குளத்தில் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனர். மகாளய அமாவாசை தினத்தில் நீர் நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதுவழக்கம். முக்கியகோயில்களில் கொரோனா காரணமாக தர்ப்பணம் செய்வதற்காக புனித நீராடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.சிவகங்கையில் நகரின் மத்திய பகுதியில் அமைந்துஉள்ள தெப்பக்குளத்தில் காலையில் இருந்தே புனித நீராடி தர்ப்பணம் செய்து முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தினர்.
மானாமதுரை: மானாமதுரை குறிச்சி காசி விஸ்வநாதர் கோயிலில் நேற்று சுவாமிக்கு சிறப்பு பூஜைகள்மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு அபிேஷக ஆராதனை நடைபெற்றன. முன்னோர்களுக்கு சமூக இடைவெளியோடு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.திருப்புவனம்: திருப்புவனத்தில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பதுமிகவும் புண்ணியம், அதிலும் அமாவாசை போன்ற தினங்களில் கொடுப்பது விசேஷம், கொரானோ பரவல் காரணமாக தடை விதிக்கப்பட்டதால் புரோகிதர்கள் யாரும் இல்லை.பூஜை பொருட்கள் வாங்க கடைகளும் இல்லை, வேறு வழியின்றி வைகை ஆற்றினுள் சூடம், பூக்கள் வைத்து மக்கள் வழிபட்டு சென்றனர்.