பதிவு செய்த நாள்
18
செப்
2020
04:09
செய்யாறு: செய்யாறு அருகே, மகாளய அமாவாசை தினத்தில், சூரிய ஒளிக்கதிர்களால் பிரகாசித்த, காசி விஸ்வநாதரை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அரசங்குப்பத்தில், நூற்றாண்டு பழமையான காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் புரட்டாசி மாத மகாளய அமாவாசையில், மூலவர் காசி விஸ்வநாதர் சுவாமி மீது, காலை, 6:00 முதல், 7:00 மணி வரை சூரிய ஒளிக்கதிர்கள் விழுவது வழக்கம். அதன்படி, புரட்டாசி மகாளய அமாவாசையான நேற்று காலை, மூலவர் காசி விசுவநாதர் சுவாமி மீது, சூரியக்கதிர்கள் விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதை, ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.