கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டையில், வள்ளலார் சுவாமி கோவில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை கொடிக்கால் தெரு மாரியம்மன் கோவில் அருகில், வள்ளலார் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கணபதி ஹோமம் செய்யப்பட்டு வள்ளலார் திருவுருவ படத்திற்கு பூஜை செய்து வழிபாடு நடந்தது. இதில் சிவ பக்தர் குணசேகரன், சிவனடியார்கள் மற்றும் அடிகளார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.