எவ்வளவு சேர்த்தாலும் போதவில்லை என பணக்காரர்களும் பணத்திற்காக ஒடுகின்றனர். அன்றாட உணவுக்கே அவதிப்படும் ஏழைகளும் அடிப்படை தேவைக்கும் பணமின்றி அல்லல்படுகின்றனர். குறிப்பாக வறுமையில் வாடும் போது இறைவன் தனக்கு அநீதி செய்கிறான் என்ற எண்ணத்தை ஷைத்தான் ஏற்படுத்துவான். திருட்டு, பொய், குற்றம் போன்ற தவறான வழிகளில் இழுத்துச் செல்வதோடு அதை நியாயப்படுத்துவான். பணம் தேவைக்கு அதிகமாக இருந்தாலும் அல்லது குறைவாக இருந்தாலும் இரண்டும் இறைவன் நமக்கு வைக்கும் சோதனை என்று கருத வேண்டும். இதனால் பணத்தை தேடும் போதும், அதை அனுபவிக்கும் போதும் எல்லை மீறாமல் கட்டுப்பாடுடன் இருக்க முடியும். எந்த சூழ்நிலையிலும் பணத்திற்காக நற்பண்புகளை இழப்பது கூடாது.