கடலாடி : கடலாடியில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் புரட்டாசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. மூலவர்கள் விநாயகர், முத்தாலம்மன், வீரமாகாளி, தர்மமுனீஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 11 வகையான அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. பூஜகர் கூரியைய்யா பூஜைகளை செய்தார். உலக நன்மைக்காக கூட்டு வழிபாடு நடந்தது.