பதிவு செய்த நாள்
24
செப்
2020
11:09
ஈரோடு: ஈரோடு, காரைவாய்க்கால் சுயம்பு நாகர் கோவிலில், ராகு-கேது பெயர்ச்சி விழா, சிறப்பு ஹோமம் நடந்தது. ராகு பகவான் மிதுன ராசியில் இருந்து ரிஷப ராசிக்கும், கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கும் பிரவேசிப்பதை முன்னிட்டு, சுயம்பு நாகருக்கு யாக பூஜை, சிறப்பு பரிகார பூஜை நடந்தது. மூலவருக்கும், ராகு- கேதுவுக்கும் பால் அபி?ஷகம் செய்யப்பட்டது. மேஷம், ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்காரர்கள் பாலாபி?ஷகம் செய்து, பரிகார பூஜையில் பங்கேற்றனர். கோவிலில் உள்ள ராகு - கேது பகவானுக்கும், நாகர் சிலைகளுக்கும் பக்தர்களே பால் ஊற்றி அபி?ஷகம் செய்து வழிபட்டனர்.