குழந்தைகள் மீது அன்பு செலுத்துவது வேறு. செல்லம் கொடுப்பது வேறு. சிலர் தவறுகளைக் கண்டிக்காமல் அவர்களை எதற்கும் பயன்படாமல் உதவாக்கரையாக்கி விடுகின்றனர். தத்துவவாதிகள் சிலர் அமெரிக்காவில் குழந்தை வளர்ப்பு பற்றி அறிவுரை கூறினர். அதன்படி குழந்தைகளைக் கண்டிக்கத் தேவையில்லை. அவர்களின் மனம் போன போக்கில் வளர விட வேண்டும். சிறுவயதிலேயே ஆன்மிக சிந்தனையை திணிக்கவும் வேண்டாம். மனப்பக்குவம் வந்ததும் அவர்களாகவே அறிந்து கொள்வர் என்றும் போதித்தனர். அதை பெற்றோரும் பின்பற்றியதன் விளைவாக அங்கிருந்த இளைஞர்கள் சீரழிந்தனர். ஹிப்பிகள் என்னும் பெயரில் ஒழுங்கீனம், ஊதாரி தனத்துடன் வளர்ந்தனர். பல் துலக்காமல், குளிக்காமல், சோம்பேறிகளாக திரிந்தனர். பெற்றோர் மீதும், சமூகத்தின் மீதும் அக்கறை இல்லாமல் போதைக்கு அடிமையாயினர். குழந்தைகளின் மீது அன்பு கொண்டவர்கள் கண்டிப்பர். அவர்களை மனம் போன போக்கில் வளர்த்தவர்களோ வெட்கத்திற்கு ஆளாவர் என்பது இங்கு சிந்திக்கத்தக்கது.