பதிவு செய்த நாள்
05
அக்
2020
01:10
நவராத்திரியை சிறப்பிக்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத விதத்திலும், புதுமையான பல துணி பொம்மைகள், நங்கநல்லுாரில் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை, நங்கநல்லுாரைச் சேர்ந்தவர் கார்த்திகாயினி. துணி பொம்மை தயாரிப்பில், இவருக்கு ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, வங்கிப் பணியை துறந்து, துணி பொம்மை தயாரிப்பு தொழிலில் இறங்கினார்.அழகானதும், நீண்ட நாள் உழைக்கக்கூடியது மட்டுமல்லாமல், எளிதில் பராமரிக்கக்கூடிய வகையிலும், இவரது கொலு பொம்மைகள் இருக்கின்றன. தத்ரூபமாக இருக்கும், இவரது துணி பொம்மைகளுக்கு, பொதுமக்களிடம் தனி மவுசு உண்டு.
இவரது கைவண்ணத்தில் உருவாகும் பொம்மைகள், அமெரிக்கா வரை பறக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும், பொம்மைகளில் புதுமை செய்யும், கார்த்திகாயினி. இந்தாண்டு ஆரோக்கியத்தைத் தரும், தன்வந்திரி மற்றும் லட்சுமி நரசிம்மர் பொம்மைகள் தயார் செய்துள்ளார்.பொம்மை தயாரிப்பு காரணமாக, ஏழை, எளிய பெண்கள் பலர், இவரிடம் வேலை வாய்ப்பு பெற்றுஉள்ளனர். - நமது நிருபர் -