பாவூர்சத்திரம் : கீழப்பாவூர் காளியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது. கீழப்பாவூர் செங்குந்தர் பிள்ளையார்கோவில் தெரு காளியம்மன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு அன்று அதிகாலை 5 மணிக்கு கணபதிஹோமம், 8 மணிக்கு மேல் கோபுர கலசம், அம்பாள் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக் கமிட்டியார் செய்திருந்தனர்.