கோயிலுக்கு செல்ல ரோடு இல்லை; பரிதவிப்பில் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2020 03:10
போடி : போடி அருகே அணைக்கரைப்பட்டி கோயிலுக்கு செல்ல ரோடு வசதியின்றி பக்தர்கள் பரிதவிக்கின்றனர். அணைக்கரைப்பட்டி மரக்காமலை சன்னாசிராயர், முனீஸ்வரன் கோயில் பழமையானது. பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம், செவ்வாய், வெள்ளியில் சிறப்பு பூஜை நடக்கும். முறையான பாதை வசதி இல்லாத நிலையில் நீர்வரத்து ஓடை, தோட்டப்பாதைகளை பக்தர்கள் பயன்படுத்தி வந்தனர். வெளியூர்களில் இருந்து பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதையொட்டி கிராம கமிட்டி மூலம் கோயிலுக்கு செல்லும் பாதையின் இருபுறமும் விவசாயிகள் ஆக்கிரமித்திருந்த மரங்களை அகற்றி 3 கி.மீ., துாரம் செல்ல வழி ஏற்படுத்தி உள்ளனர். ஆனால் ரோடு இல்லாமல் குண்டும், குழியுமாக உள்ள மண்பாதையில் டூவீலர், ஆட்டோ, வேன் மூலம் செல்ல சிரமப்படுகின்றனர். ரோடு அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.