கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகர ஆர்.எஸ்.எஸ்., சார்பில் கோவில் குளம் துாய்மைப்படுத்தும் பணி நடந்தது. கள்ளக்குறிச்சியில் பழைய மாரியம்மன் கோவில் அருகே உள்ள முப்பை அம்மன் கோவில் குளம் துார் வாரும் பணிக்கு, நகர தலைவர் வைஷ்ணவி தாமோதரன் தலைமை தாங்கினார். மாவட்ட அறிவுசார் பிரிவு செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் கல்கி நாராயணன், நகர ஒருங்கிணைப்பாளர் சரவணன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் குளத்தை துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.மேலும், கோமுகி ஆற்றிலிருந்து இந்த குளத்திற்கு தண்ணீர் வரும் வகையில் உள்ள வாய்க்காலின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மாவட்ட இணைச் செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.