முதல்வர் அறிவிப்பு வெறும் கண்துடைப்பா: தமிழகம் முழுவதும் 8 லட்சம் கோயில் பூஜாரிகள் ஏமாற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2020 03:10
கோவை:கிராம கோயில் பூஜாரிகளுக்கு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் முதல்வரால் வெளியிடப்பட்ட அறிவிப்பு ஏழு மாதங்களாகியும் அமல் செய்யப்படாததால் தமிழகம் முழுவதும் எட்டு லட்சம் கிராம கோவில் பூஜாரிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும்ஆறு லட்சம் கிராம கோயில்கள் உள்ளன. இவற்றில் எட்டு லட்சம் பேர் பூஜாரிகளாக உள்ளனர். பக்தர்கள் அளிக்கும் தட்டு காணிக்கை மட்டுமே இவர்களது வருமானமாக உள்ளது. கொரோனா பரவலுக்குப்பின் அதற்கும் வழியில்லாமல் போய் விட்டது. வறுமையில் வாடும் வயது முதிர்ந்த பூஜாரிகள் நலன் கருதி அவர்களது ஓய்வூதியத்தை மாதம் 3000 ரூபாயாக அதிகரித்து வழங்குவதாக சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். மருத்துவம் கல்வி உதவிதொகை போன்ற அரசின் நல வாரிய சலுகைகள் அனைத்தையும் பெறலாம் என்றும் தெரிவித்தார்.ஆனால் ஏழு மாதங்கள்கடந்தும் முதல்வர் அறிவிப்பு செயல்படுத்தப்படவில்லை.
விஸ்வ ஹிந்து பரிஷத் அகில உலக முன்னாள் செயல் தலைவர் வேதாந்தம் கூறியதாவது: தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் குல தெய்வ கோயில்கள்ஆண்டுக்கு ஒரு சில முறை திருவிழா நடத்தும் கோயில்கள் இருக்கின்றன. சொந்த நிலமோ வாடகை வருமானமோ இல்லாத இந்த கோவில்களில் பணியாற்றும் பூஜாரிகள் போதிய வருமானம் இன்றி வாழ்க்கை நடத்த முடியாமல் சிரம நிலையில் இருக்கின்றனர்.எங்கள் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு ஓய்வூதியத்தை 3000 ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக முதல்வர் அறிவித்தார்.
கிடப்பில் இருக்கும் அந்த அறிவிப்பை உடனடியாக அமல் செய்ய வேண்டும்.மேலும் அரசு அறிவித்துள்ள சலுகைகளை பெறுவதற்கு ஆண்டு வருமானம் 24 ஆயிரம் ரூபாய்க்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசு நிபந்தனை விதித்துஉள்ளது. இதை 72 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும்.பெண்களுக்குவிடுமுறை வேண்டும்பெண்கள் நலனை பாதுகாக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் மூன்று நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை தமிழக அரசு அறிவித்து முன்மாதிரி மாநிலமாக திகழவேண்டும். கோயில் நிலங்கள் ஆவணங்கள் இன்றியும் ஆக்கிரமிப்பிலும் இருக்கின்றன. இவற்றை ஆவணப்படுத்தவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலங்களை மீட்க டி.ஆர்.ஓ. அந்தஸ்திலான அதிகாரி நியமிக்க வேண்டும்.இவ்வாறு வேதாந்தம் கூறினார்.