பதிவு செய்த நாள்
09
அக்
2020
01:10
ஓமலூர்: ஓமலூர், கோட்டை மாரியம்மன் கோவிலில், பல்வேறு காரணங்களால், இரு ஆண்டாக, உண்டியல் திறக்கப்படும் நிகழ்ச்சி நிறுத்திவைக்கப்பட்டிருந்து. நேற்று காலை, சேலம், ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் உமாதேவி தலைமையில், கோவிலில் இருந்த, தற்காலிக உண்டியல் ஆறு, நிரந்தர உண்டியல் இரண்டு திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அதில், தங்கம், வெள்ளி பொருட்கள் மட்டுமின்றி, மூன்று லட்சத்து, 88 ஆயிரத்து, 622 ரூபாய் காணிக்கை இருந்தது.