பதிவு செய்த நாள்
11
அக்
2020
04:10
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில், நேற்று காலை வி.ஐ.பி., தரிசனத்தில், புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையையொட்டி, தமிழக துனை முதல்வர் பன்னீர செல்வம், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமனி, தொழில்துறை அமைச்சர் சம்பத், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டம் துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
ரங்கநாதர் மண்டபத்தில், தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கி, வேத பண்டிதர்கள் மூலம், அவர்களுக்கு வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர்.இதையடுத்து, கோவிலுக்கு எதிரே உள்ள ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் தரிசனம் செய்து, அகிலாண்டம் அருகே தேங்காய் உடைத்து வழிபட்டனர். பின், ஏழுமலையான் கோவில் பெரிய ஜீயர் மடத்தில், சடகோப ராமானுஜ பெரிய ஜீயரை சந்தித்து, ஆசீர்வாதம் பெற்று, மடத்தில் சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். இதன்பின், அனைவரும் தரிசனம் முடித்து, கார்களில் சென்னை புறப்பட்டுச் சென்றனர்.