ராஜபாளையம்: ராஜபாளையம் அடுத்த தேவதானம் அருகே கோவிலுார் மாரியம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நடந்தது.மூன்று நாள் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு பக்தர்கள் விரதமிருந்து தீச்சட்டி, பூப்பெட்டி, முளைப்பாரி, ஆயிரம் கண் பானை என நேர்த்திக்கடன் செலுத்தினர்.அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் அலங்காரம் நடந்தது. நள்ளிரவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏற்பாடுகளை கோவிலுார் மாரியம்மன் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.