ராஜபாளையம்: மீனாட்சிபுரம் மாரியம்மன் கோயில் விழா மூன்று நாட்கள் நடைபெற்றது. கடைசி நாளான நேற்று பூக்குழி நடந்தது. செவ்வாய் முதல் அக்கினி சட்டி, முளைப்பாறி, ஆயிரம் கண் பானை நடந்தது. ஏற்பாடுகளை ஊர்த்தலைவர் அய்யர் சாமி, செயலாளர் பாலகுரு, பொருளாளர் கிருஷ்ணன் செய்தனர். இதே போல் கிருஷ்ணாபுரம் சோலைச்சேரி மாரியம்மன் கோயிலிலும் பூக்குழி திருவிழா நடந்தது.