பதிவு செய்த நாள்
12
அக்
2020
11:10
புதுச்சேரி; சாரதா நவராத்திரியை முன்னிட்டு, புதுச்சேரி தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில், சத சண்டீ மகா ேஹாமத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் சப்த ஸதி பாராயணமும், சத சண்டீ மகா ேஹாமமும் வரும் 17ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடக்கிறது. புதுச்சேரியில் தொடர்ந்து 10 நாட்களுக்கு சத சண்டீ மகா ேஹாமம் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். வரும் 17ம் தேதி துவங்கி, 25ம் தேதி வரை தினசரி காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வேதிகார்ச்சனை, சப்த ஸதி பாராயணம், சப்த ஸதி ேஹாமம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது.மாலை 4:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வேதிகார்ச்சனை, மூல மந்திர ேஹாமம், பூர்ணாஹூதி, சதுர்வேத உபசாரம், லலிதா சகஸ்ர நாம பாராயணம் நடக்கிறது. தொடர்ந்து, தினசரி மாலை 6:00 மணிக்கு ஸத்சங்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சத சண்டீ மகா ேஹாமத்தின் நிறைவு நாளான 26ம் தேதி காலை 7:00 மணிக்கு வ ேஸார்தாரை, விசேஷ த்ரவ்யாஹூதி, மகா பூர்ணாஹூதி, அபிஷேகம், தீபாராதனை, தீர்த்த பிரசாதம், அக்ஷதை ஆசிர்வாதம், பிரசாத வினியோகம் நடக்கிறது.
கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், உலக நன்மைக்காகவும், இயற்கை சீற்றங்களில் இருந்து உலகை காப்பாற்றவும், மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் கிடைக்கும் பொருட்டும், மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டியும் சத சண்டீ மகா ேஹாமம் நடத்தப்படுகிறது.ரூ.2,000 செலுத்தி சத சண்டீ மகா ேஹாமத்தில் பங்கேற்கலாம். ேஹாம திரவியங்கள், இதர செலவுகளுக்கும் பக்தர்கள் நன்கொடை அளிக்கலாம்.மகா ேஹாமத்துக்கான ஏற்பாடுகளை, புதுச்சேரி தர்ம சம்ரக்ஷண சமிதியின் தலைவர் ஸ்ரீனிவாசன், செயலாளர் சீதாராமன், பொருளாளர் லஷ்மிநாராயணன், புரவலர்கள் சங்கர் எம்.எல்.ஏ., புதுச்சேரி தினமலர் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன், பேராசிரியர் தரணிதராச்சாரியார், கீதாராம் சாஸ்திரிகள் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.