மதுரை: நவராத்திரி என்றாலே கொலு நினைவுக்கு வந்து விடும். வாங்க துாண்டும் வகையில் பல வண்ணங்களில் தனி, செட் கொலு பொம்மைகள் நவராத்திரி விழா தள்ளுபடி விலையில் மதுரை டவுன்ஹால்ரோடு மாவட்ட சர்வோதய சங்கத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.
லட்சுமி தேவியுடன் கூடிய ஆனந்த சயன கோலத்தில் சுருட்டபள்ளி பெருமாள், தாத்தாத்ரேயர், திருப்பதி மூலவர் வெங்கடேசபெருமாள் போன்றவை இந்தாண்டு ஸ்பெஷலாக வந்துள்ளன. திருமணம், இசைக்கச்சேரி, மாப்பிள்ளை அழைப்பு, மீனாட்சி திருக்கல்யாணம், பள்ளி மாணவர்கள் என செட் பொம்மைகளும் காண்போரை கவருவதாக உள்ளன. கொரோனா ஊரடங்கால் இந்தாண்டு இப்பொம்மைகளுக்கு பத்து சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. மாவட்ட சர்வோதய சங்க செயலாளர் கண்ணன் கூறுகையில், புதுச்சேரி, காஞ்சிபுரம் மற்றும் வடமாநிலங்களில் இருந்து இப்பொம்மைகள் எண்ணற்ற வண்ணங்களில் வந்துள்ளன. விடுமுறை நாட்கள் தவிர தினமும் காலை 9:30 முதல் இரவு 8:30 மணி வரை தள்ளுபடி விலையில் வாங்கலாம். கொலு அமைக்க தேவையான படிகளும் விற்கப்படுகின்றன என்றார். கொலுபொம்மைகள் வாங்க 0452-234 0184 க்கு அழைக்கலாம்.