பதிவு செய்த நாள்
13
அக்
2020
11:10
திருநெல்வேலி : திருநெல்வேலி தாமிரபரணி கரையில், பழமையான உச்சிஷ்ட விநாயகர் கோவில் முன், உடல்கள் புதைப்பதை, அறநிலைய துறை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருநெல்வேலி, ஜங்ஷன் மணிமூர்த்தீஸ்வரத்தில், தாமிரபரணி கரையில், 800 ஆண்டுகள் பழமையான உச்சிஷ்ட விநாயகர் கோவில் உள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரம், கொடிமரம், மூன்று பிரகாரங்கள் என, 8 ஏக்கரில் இக்கோவில் அமைந்துள்ளது.கும்பாபிஷேகம்இங்குள்ள மூலவர், நீலவாணி அம்பாளை மடியில் தாங்கியிருப்பார். வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும், உறவு பலப்படும் என்பது நம்பிக்கை. 2016ல் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், தினமும் வெளியூர் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
கோவிலுக்கு எதிரே, தாமிரபரணி ஆற்றங்கரையில், விளைநிலங்கள் உள்ளன. தனியார் நிலங்களை, சில ஆண்டுகளுக்கு முன் விலைக்கு வாங்கிய கிறிஸ்துவ அமைப்பினர், கல்லறைகள் ஏற்படுத்திஉள்ளனர்.கோவிலுக்கு எதிரே தற்போதும் உடல்களை புதைப்பதுடன், இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்படுகிறது. இது, பக்தர்களுக்கு வேதனையை தருகிறது.பொதுமக்கள் எதிர்ப்பால், கோவில் முன் உள்ள இரண்டு கல்லறை தோட்டங்களில், ஒன்றில் உடல்களை புதைக்கவில்லை. இன்னொரு கல்லறை தோட்டத்தில், தொடர்ந்து உடல்களை புதைக்கின்றனர். கோவில் செயல் அலுவலர் தேவி கூறுகையில், இது தொடர்பாக, அரசு தான் நிரந்தர தீர்வு காண முடியும், என்றார்.
மாற்று இடம்கோவில் கமிட்டி உறுப்பினர் ரத்தினம் கூறியதாவது:கோவிலை சுற்றி, 100 மீட்டர் துாரத்திற்கு மதுக்கடை, இறைச்சி கடை என பக்தர்கள் முகம் சுளிக்கும் வகையில் எதுவும் இருக்கக் கூடாது என, ஹிந்து அறநிலையத் துறையின் உத்தரவு உள்ளது.ஆனால், கோவிலுக்கு எதிரே கல்லறை அமைத்துள்ளனர்.அரசிடம் முறையான அனுமதி பெறாததால், அரசே தடுத்து நிறுத்த வேண்டும். கல்லறைகள் அப்புறப்படுத்தப்பட்டு, மாற்று இடம் வழங்குவது குறித்து, அரசு முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.ஹிந்துக்களின் உரிமை பாதிக்கப்படுவது குறித்து, சட்ட உரிமை குழு மூலமும் அரசுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.