பழநி: பழநி முருகன் கோயிலில் நேற்று ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.செப்.1 முதல் ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களை மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கின்றனர். நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் வெளிமாவட்ட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.வெளியூர் பக்தர்கள் தேவஸ்தான இலவச வாகன நிறுத்தம், சுற்றுலா பஸ் ஸ்டாண்டில் வாகனங்களை நிறுத்தாமல்ரோட்டோரங்களிலும், கிரிவீதியிலும் நிறுத்தியதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. மேலும் சன்னதிவீதி, குளத்துரோடு, பூங்கா ரோட்டில் சாலைப்பணிகள் நடப்பதால் பக்தர்களின் வாகனங்கள் அடிவாரம் பகுதிக்கு செல்ல சிரமம் எற்பட்டது.