திருப்பரங்குன்றம் : மதுரை கைத்தறி நகர் ஆதிசக்தி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நடந்தது. அனுக்ஞை, கணபதி பூஜைகள் முடிந்து மூலவர், பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடந்தது. கூத்தியார்குண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.