கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் பிரதோஷகால பூஜைகள் நடந்தது. கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் பிரதோஷகால பூஜைகள் நடந்தது. நேற்று மாலை 5:30 மணி அளவில் ராமநாதீஸ்வரருக்கும்,நந்தித் தேவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் பிரதோஷ மூர்த்தி சுவாமிக்கு தீபாராதனையும், பிரதோஷ மூர்த்தி சுவாமிகள் கோவிலின் உட்பிரகாரத்தில் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரவிச்சந்திரன், சிவாச்சாரியார் பாலகிருஷ்ணன்,ஓதுவார் பழனியாண்டி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர். இதில் பக்தர்கள் சமூக இடைவெளி யுடன் கலந்து கொண்டு பிரதோஷமூர்த்தி சுவாமியை வழிபட்டனர்.