விழுப்புரம், : விழுப்புரம் இ.எஸ்., கார்டன் அமிர்த கணபதி கோவிலில் நவராத்திரி நிறைவு விழா நடந்தது.விழாவை முன்னிட்டு, கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு செய்தனர். நேற்று முன்தினம் பத்தாம் நாள் விழாவில், அம்மன் மகிஷாசூர மகா காளி பிரித்தியங்கரா வராகி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, விநாயகர், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர், ஆஞ்சநேயர், சனீஸ்வர சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது. ஏற்பாடுகளை அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.