பதிவு செய்த நாள்
28
அக்
2020
04:10
சென்னை: சென்னை நகரின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில், பிரதோஷ வழிபாடு, இன்று நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ஊரடங்கு காரணமாக, சென்னை புறநகரில் உள்ள வழிபாட்டு தலங்களில், 5 மாதங்களுக்கு பின், பக்தர்கள் தரிசனத்திற்கு, கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மூத்த குடிமக்களின் தரிசனத்திற்கு அனுமதி அளிக்காததால், பிரதோஷ வழிபாடு, தொடர்ந்து நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதன்படி, சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு, இன்று மாலை நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில், https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற இணைய முகவரி மூலம், இன்று மாலை, 4:00 மணிக்கு, நந்தியம் பெருமான் அபிஷேகமும், அதை தொடர்ந்து, பிரதோஷ நாயகர் அபிஷேகமும், நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
திருவேற்காடு வேதபுரிஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாட்டை, https://www.youtube.com/watch?v=Tkb9h27QkPw என்ற YouTube channel என்ற இணையதளம் மூலம், இன்று மாலை, 4:30 மணி முதல், நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.