நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு பல்வேறு சுவாமி சிலைகளை கொண்டு கொலு வைத்தனர். தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது. விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இரவு வேணுகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கையில் வில்லுடன் அசுரனை அழிக்க எழுந்தருளினார். வேணுகோபால சுவாமி அம்பு போட்டு அசுரனை அழிக்கும் பூஜையை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார்.