மகளின் திருமணத்துக்காக சேர்த்த பணத்தை நண்பரிடம் கொடுத்து வைத்தார் ஒருவர். அதை அபகரிக்க நினைத்தால் முடிவு என்னாகும்... ஒரு பெண்ணின் திருமணம் தடைபடுவதோடு குடும்பம் நிலை குலையும். நிதி நிறுவனம் நடத்துபவர் மோசடி செய்ய நினைத்தால் அவரை நம்பி பணம் கொடுத்த ஆயிரம் ஆயிரம் ஆயிரம் குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகும். நம்பி ஒப்படைத்த பொருளை கேட்கும் போது துரோகம் செய்யக் கூடாது ‘’ நம்பிக்கையுடன் யார் எந்த பொருளைக் கொடுத்தாலும் அதை சரியான நேரத்தில் திருப்பிக் கொடுங்கள்’’