ஒரு ஆராய்ச்சியாளர் நல்லவர் ஒருவரின் சந்ததியையும், தீயவழியில் பொருள் சேர்த்த கோடீஸ்வரர் ஒருவரின் சந்ததியையும் சந்தித்து ஆய்வு செய்தார். நல்லவரின் சந்ததி நல்ல பணிகளில் ஈடுபட்டு வாழ்வை நிம்மதியாக கழித்தனர். அவர்கள் கல்வியில், பொருளாதாரத்தில் சிறந்து விளங்கினர். கோடீஸ்வரரின் வம்சாவளியில் சிலர் உடல்குறையோடும், சிலர் மனநிலை பாதிக்கப்பட்டும், சிலர் குற்றத்தில் ஈடுபட்டு தண்டனையும் பெற்றிருந்தனர். * நல்லவர்களின் சந்ததி பலமுடன் இருக்கும். அவர்கள் நலமுடன் வாழ்வர். * நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி துன்பப்படுவதையும் காண முடியாது. * பனை மரத்தைப் போல நீதிமான் செழித்து வளர்வான். (நல்லவனாக வாழ்வது நமக்காக மட்டுமல்ல, சந்ததிக்காகவும் தான்.) பெரிய எழுத்தாக்கவும்.