திருக்கடையூர் : வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பூரண நலம் பெற வேண்டி திருக்கடையூர் அருகே உள்ள மணல்மேடு மார்க்கண்டேயர் கோவிலில் அவரது குடும்பத்தினர் சிறப்பு யாகம் செய்து வழிபட்டனர்.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அருகே டி.மணல்மேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மருத்துவதி சமேத மிருகண்டு ஈஸ்வரர் கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் சிரஞ்சீவி மார்க்கண்டேயர் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் இக் கோவிலில் சிறப்பு யாகம் செய்து வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம் இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு நேற்று காலை வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மகன் சிவ வீரபாண்டியன் குடும்பத்துடன் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தை பூரண நலம் பெற வேண்டி ஆயுள் மற்றும் மிருத்தியுஞ்சய ஹோமம் நடத்தி சுவாமி அம்பாள் மற்றும் மார்க்கண்டேயருக்கு சிறப்பு வழிபாடு நடத்தினார் முன்னதாக அவர் கோவில் முன்பு கோ பூஜை செய்தார் யாகம் மற்றும் பூஜைகளை கோவில் அர்ச்சகர் சுந்தரமூர்த்தி குருக்கள் செய்து வைத்தார்.