பதிவு செய்த நாள்
29
அக்
2020
04:10
புதுச்சேரி; கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை நேற்று நடந்தது.புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சாலை கருவடிக்குப்பத்தில், பிரசித்தி பெற்ற குரு சித்தானந்தா கோவில் உள்ளது. இக்கோவிலில், ஐப்பசி மாத பிரதோஷ தினத்தை முன்னிட்டு, நேற்று மாலை சுவாமி மற்றும் நந்தி பகவானுக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. அதைத் தொடர்ந்து, சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.ஏராளமான பக்தர்கள், சமூக இடைவெளி கடைபிடித்து, சாமி தரிசனம் செய்தனர். பிரதோஷ வழிப்பாட்டிற்கான ஏற்பாடுகளை தேவசேனா குருக்கள், சேது குருக்கள், சீனு குருக்கள், சுரேஷ் குருக்கள் செய்திருந்தனர்.