புதுச்சேரி; ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, வேதபுரீஸ்வரர் கோவிலில் இன்று மாலை அன்னாபிஷேகம் நடக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வருகின்ற பவுர்ணமியன்று, சிவன் கோவில்களில் அன்னத்தால் சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். இதன்படி, காந்தி வீதியில் அமைந்துள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் இன்று மாலை அன்னாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இன்று மாலை 5:00 மணி முதல், 7:30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அன்னாபிஷேகத்திற்கு தேவையான அரிசி உள்ளிட்டவற்றை கோவிலில் அளிக்கலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும் அன்னம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.