புதுச்சேரி; ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, கருவடிக்குப்பத்தில் உள்ள குரு சித்தானந்த சுவாமிக்கு இன்று அன்னாபிஷேகம் நடக்கிறது.புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, இன்று (30ம் தேதி) இரவு 7.30 மணிக்கு, குரு சித்தானந்த சுவாமிக்கு அன்னாபிஷேகமும், அதை தொடர்ந்து சிறப்பு தீபாராதனையும் நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சியில், சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் பங்கேற்கின்றனர்.ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று, சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்வது வழக்கம். சிவலிங்கத்தில் வைக்கப்படும் அன்னத்தின் ஒவ்வொரு பருக்கையும் சிவ ரூபமாகும். அதனை தரிசிப்பவர்களுக்கு, வாழ்நாள் முழுவதும் அன்னத்திற்கு பஞ்சம் இருக்காது என்பது ஐதீகம்.விழா ஏற்பாடுகளை, கோவில் சிறப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மணிகண்டன், கோவில் குருக்கள் தேவசேனாதிபதி ஆகியோர் செய்து வருகின்றனர்.