Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காவிரி பாதுகாப்பு ரத யாத்திரைக்கு ... தனுஷ்கோடி கோயிலில் கலசம் பிரதிஷ்டை தனுஷ்கோடி கோயிலில் கலசம் பிரதிஷ்டை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமர் கோவில் வளாகத்தில் வசதிகள்: மக்கள் ஆலோசனை கூறலாம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமர் கோவில் வளாகத்தில் வசதிகள்: மக்கள் ஆலோசனை கூறலாம்

பதிவு செய்த நாள்

05 நவ
2020
10:11

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட உள்ள வளாகத்தில் ஏற்படுத்த வேண்டிய வசதிகள் பற்றி கோவிலை கட்டும் அறக்கட்டளை, மக்களிடம் ஆலோசனை கேட்டு உள்ளது.

உத்தர பிரதேசத்தில், உள்ள அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு அனுமதியளித்தது. கோவில் கட்டுவதற்காக, ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில், அறக்கட்டளை ஒன்றை, மத்திய அரசு அமைத்தது.

இந்த அறக்கட்டளை, கோவில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட், 5ம் தேதி, ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இப்போது, அஸ்திவாரம் தோண்டும் பணிகள் நடந்து வருகின்றன.


இந்நிலையில், ஸ்ரீ ராம ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அயோத்தியில், ராமர் கோவில் சுற்றி உள்ள, 70 ஏக்கர் நிலத்தையும் பக்தர்கள் வசதிக்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ராமர் கோவில் வளாகத்தில், நுாலகம், குருகுல பள்ளி, அருங்காட்சியகம், கோசாலை, யாத்ரீகர்கள் தங்குமிடம் உட்பட பல வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வசதிகளை எப்படி கட்டலாம், மேலும், வேறு என்ன வசதிகள் செய்யலாம் என்பது பற்றி, மக்களிடம் ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது. ஆலோசனைகள் அனைத்தும், வாஸ்து மற்றும் சிற்ப சாஸ்திரத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஆலோசனைகளை, நவ., 25க்குள், அறக்கட்டளைக்கு, இ - மெயில் வழியாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பிரசாதம் தயாரித்து வழங்கும் திட்டத்தை, ஹிந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் முக்கிய ... மேலும்
 
temple news
மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவத்தை முன்னிட்டு மலைமீதுள்ள நுாபுர கங்கை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறையில் கோமதீஸ்வரர் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar