பதிவு செய்த நாள்
05
நவ
2020
11:11
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயில் விமானத்தில் கலசம் பிரதிஷ்டை நடந்தது. ராமாயண வரலாற்றில்,சீதையை விடுவிக்க வலியுறுத்திய விபீஷணரை, தன் தம்பி என பாராமல் ராவணன் அவமானப்படுத்தியதும், அங்கிருந்து வெளியேறி தனுஷ்கோடியில் இருந்த ஸ்ரீ ராமரிடம் அடைக்கலம் தேடி வருகிறார். விபீஷணரை இலங்கை மன்னராக ஸ்ரீராமர் அறிவித்து, கடல்நீரில் விபீஷணருக்கு பட்டாபிேஷகம் சூட்டினார் என கூறப்படுகிறது. இதனை நினைவு கூறும் விதமாக தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயில் உருவானது. பழமையான இக்கோயில் விமானத்தில் 2019 டிச.,31ல் கலசம் திருடு போனது.நேற்று கோதண்டராமர் கோயிலில் பூரணாஹூதி, யாகசாலை பூஜை நடந்ததும், விமானத்தில் பிரதிஷ்டை செய்த கலசத்திற்கு குருக்கள் புனித நீரை ஊற்றி பூஜை செய்து, தீபாராதனை நடத்தினர். கோயில் இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர் ஜெயா, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், பொறியாளர் ராமமூர்த்தி, ஊழியர்கள் தரிசனம் செய்தனர்.