பதிவு செய்த நாள்
08
நவ
2020
10:11
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உண்டியல், பக்தர்கள் காணிக்கையாக, 24 லட்சத்து, 89 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளனர்.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் கோவில் உள்ளது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலில், ஆறு உண்டியல்கள் உள்ளன. மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு ஒரு முறை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மேற்கொள்ளப்படும். அந்த வகையில், நேற்று, ஆஞ்சநேயர் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட அலுவலர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். மதியம், 1:00 மணிக்கு துவங்கிய பணி இரவு, 7:00 மணி வரை தொடர்ந்தது. மொத்தம், 24 லட்சத்து, 89 ஆயிரத்து, 727 ரூபாய் ரொக்கம், ஆறரை கிராம் தங்கம், 60 கிராம் வெள்ளி இருந்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.