புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதியை சேர்ந்த கோவில்களுக்கு ஒரு கால பூஜைக்கான நிதியுதவியை சபாநாயகர் சிவக்கொழுந்து வழங்கினார்.லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் வலம்புரி ஞான விநாயகர் கோவில், செல்வ விநாயகர் கோவில், அசோக் நகர் செல்வசக்தி விநாயகர் கோவில், சலவையாளர் நகர் கெங்கை முத்துமாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு இந்து அறநிலையத்துறை சார்பில் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி லாஸ்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது. நான்கு கோவில்களுக்கும் ஒரு கால பூஜை செய்வதற்கான நிதியுதவியாக தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.80 ஆயிரத்துக்கான காசோலையை அறங்காவலர் குழுவினர்களிடம் சபாநாயகர் சிவக்கொழுந்து வழங்கினார்.நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.