ஈரோடு: ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், மகிமாலீஸ்வரர் கோவில், கஸ்தூரி அரங்கநாதர் கோவில்களில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. கோசாலை உண்டியல் உள்ளிட்ட, 19 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. மொத்தம், நான்கு லட்சத்து, 38 ஆயிரம் ரூபாய், 25 கிராம் தங்கம், 64 கிராம் வெள்ளி பொருட்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.வாழை தோட்டத்து அய்யன் கோவில் உதவி கமிஷனர் மேனகா, செயல் அலுவலர் கங்காதரன் முன்னிலையில், தனியார் துறை பணியாளர், திருக்கோவில் ஊழியர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.